நூல் நோக்கு: இருள் உலகத்தின் நிழல்

நூல் நோக்கு: இருள் உலகத்தின் நிழல்
Updated on
1 min read

அஜ்வா. இது இன்னோர் உலகம். இருள் சூழ்ந்த உலகம். போதை சூழ்ந்த உலகம். அடிமைகளின் உலகம். இந்த உலகை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இருள் மட்டுமே புலப்படும்.

அந்த உலகின் உள்ளே உலவுபவர்களுக்கு மட்டும் அந்த இருளானது பிரகாசமான ஒளிவிளக்கு. ஆனால், அணைவதற்கு முன்பான பிரகாசம் அது.

நாவலின் பிரதானக் கதை மாந்தருக்கு உருவாகும் பயத்தின் வழியாக பயணிக்கிறது கதைக் களம். கதைசொல்லியான கஞ்சா புகைநோயாளியும் அவனது தோழி டெய்ஸியும் ஒருவரை ஒருவர் போதை உலகிலிருந்து வெளியேற்ற எத்தனிப்பதும் மீண்டும் உள்ளே விழுவதுமாகப் புகைநோயாளிகளின் இயலாமையைத் தத்ரூபமாக எழுதியிருக்கிறார் சரவணன் சந்திரன்.

அவரிடம் படைப்புக்குத் தேவையான கச்சாப் பொருட்கள் குவிந்துகிடக்கின்றன. ஆனால், அவரது அவசரம் காரணமாக அந்தக் கச்சாப் பொருட்கள் வேறொரு தளத்துக்குச் செல்லாமல் சிதறிப்போய் விடுகின்றன. அவசரம் விடுத்து, படைப்புக்குத் தேவைப்படும் அவகாசத்தைக் கொடுத்தால் சரவணன் சந்திரனின் கலையில் ஆழம் கூடும் என்று தோன்றுகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in