

இந்திய உருது இலக்கியத்தின் மகத்தான ஆளுமைகளில் ஒருவராக அறியப்பட்ட இஸ்மத் சுக்தாய் புனைவிலக்கியம் மட்டுமின்றி கட்டுரைகள், சொற்சித்திரங்கள் ஆகியவற்றிலும் முத்திரை பதித்தவர். தன் சமகாலத்து ஆளுமைகள் பற்றிய அவரது எழுத்துக்கள் அவர்களின் எழுத்துகளைப் பற்றியதாக மட்டுமின்றி, மனித மாண்பில் அவர்களின் தனித்துவத்தைப் போற்றி வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றன.
தன் காலத்தில் செயல்பட்டுவந்த முற்போக்கு எழுத்தாளர்களின் கூட்டமைப்பு, அரசியல், சமூக சூழ்நிலைகள் ஆகியவை குறித்த தொகுப்பாக வெளிவந்துள்ள இந்நூல் சுக்தாயின் மறு ஆன்மா என்று கூறத்தக்க சிறப்பு பெற்ற சாதத் ஹசன் மண்ட்டோ, பத்ராஸ் பொக்காரி, கிஷன் சந்தர், ராஜீந்தர் சிங் பேடி ஆகியோரின் ஆளுமையை சுவைபட சித்தரிக்கிறது.
எழுத்தாளராக மட்டுமின்றித் தன் கணவருடன் இணைந்து ஆறு திரைப்படங்களையும், அவரது மறைவுக்குப் பிறகு ஆறு திரைப்படங்களையும் உருவாக்கிய ஆளுமையான சுக்தாயின் இந்த நினைவலைகள் நூல் தனித்துவம் பெற்றதாக விளங்குகிறது.
- வீ.பா. கணேசன்