

மிக அதிகமான இரைச்சலையும், மிகக் குறைவான வெளிச்சத்தையும் உண்டாக்கும் இந்தப் பிரச்சினையின் விரிவான பரிமாணத்தை வழங்கும் இந்நூல் முதலில் 1968-ல் வெளியானது. நீண்ட நாட்களாக மறுபதிப்பு காணாத குறை இப்போது தீர்ந்துள்ளது.
தமிழ்நாட்டவராக இருந்தபோதிலும், டெல்லியில் திறமைமிக்க ஆங்கிலப் பத்திரிகையாளராக நீண்ட நாட்கள் பணியாற்றிய மோகன் ராம் இந்தப் பிரச்சினையின் ஆணிவேரை அலசி ஆராய்ந்திருக்கிறார் என்பதை இந்தியின் துயரம், பிற்போக்கு அரசியல், பிரிவினை- ஓர் ஆய்வு, நெருங்கி வரும் மோதல் ஆகிய 4 கட்டுரைகள் தெளிவாக விளக்குகின்றன. தனது சமகால திராவிட, நக்சலைட், இலங்கைப் பிரச்சினைகளின் மீது கூர்மையான கட்டுரைகளை எழுதிய பெருமையும் கொண்டவர் அவர்.
இந்தித் திணிப்பு பற்றி ஆட்சிமொழி குறித்த ஆவணங்களோடு கூடவே, பல்வேறு அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை, சலனங்களை எடுத்தாண்டு வாதமெழுப்பும் இந்நூல் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமான வரவு.