

இலக்கிய நூல்களைப் போல அறிவியல் நூல்கள் படிப்பதற்கு சுவாரசியம் ஊட்டாதவை என்கிற பொதுவான குற்றச்சாட்டு உண்டு.
எதையும் கதை வடிவில் தரும்போது படிப்பதற்கான சுவை கூடிவிடும் என்பதை நிரூபித்துள்ளது இந்தக் குறுநூல். குட்டிப்பெண் மாதவியும் சார்லஸூம் தாத்தாவுடன் உரையாடுவதில்தான் எத்தனையெத்தனை அறிவியல் தகவல்கள் கிடைக்கின்றன.
பிரபஞ்சம் தோன்றிய கதை, அணுக்கள் எங்கிருந்து வந்தன?, பூமி எத்தனை பெரியது?, உயிர்கள் தோன்றிய வரலாறு போன்ற அறிவியல் உண்மைகளை இந்நூல் அழகுற பகிர்ந்துள்ளது.
விலை:ரூ.35, அறிவியல் வெளியீடு, சென்னை-86, தொலைபேசி- 044- 28113630