

குழந்தைகளுக்குக் கதைகள் படிக்கப் பிடிக்கும். அதுவும் குட்டிக் குட்டிக் கதைகள் என்றால் ரொம்பவே பிடிக்கும் என்று தெரியும்.
ஆனால், குழந்தைகள் தொடர்கதைகள் படிக்க மாட்டார்கள் என்று பொதுவாகச் சொல்வதுண்டு. அப்படியெல்லாம் இல்லை; சுவாரசியமான விஷயங்களைத் தொகுத்து அழகாகச் சொன்னால் தொடர்கதையையும் படிப்பார்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இந்தச் சிறுவர் தொடர்கதையை எழுதியுள்ளார் ஆல்பர்ட். உணவு மழை பொழியும் அதிசயத் தீவொன்றுக்குச் செல்லும் அகிலா, நிகிலா, ரவி மூவரும் சந்திக்கும் திடீர் திருப்பங்களை ரசிக்க முடிகிறது.
விலை: ரூ.50, பாரதி புத்தகாலயம், சென்னை- 600018, தொலைபேசி- 044- 24332424