நூல் நோக்கு: பொதுவாழ்வில் சிவாஜி

நூல் நோக்கு: பொதுவாழ்வில் சிவாஜி
Updated on
1 min read

சிவாஜி கணேசன்! பன்முகத் தன்மையுடன் தன்னை வெள்ளித்திரையில் வெளிப்படுத்திய கலைஞன்! பொதுவெளியில் அவர் தன் ஆளுமையை எவ்விதம் பதிவுசெய்துள்ளார், அவரது அரசியல் பங்களிப்புகளின் பின்னால் இருந்த அவரது மனம் சார்ந்த நியாயங்கள் என்ன என்பதெல்லாம் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

1963-ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் நடந்தபோது தனது சொந்த நகைகளுடன் சேர்த்து, தமிழகமெங்கும் வசூலித்த பெரும் பணத்தைப் போர்நிதியாக வழங்கியது; திருத்தணியை மீட்கம.பொ.சி நடத்திய போராட்டங்களுக்கு நிதி வழங்கியது எனக் கடந்த கால நிஜங்கள் இந்தப் புத்தகத்தில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. சிவாஜியின் ஈகைப் பண்பின்மீது அமில மழை பொழிபவர்கள் இதனை அறிந்துகொள்ள வேண்டும்.

இந்தப் புத்தகத்தின் முதல் பாகம் முழுவதும் சிவாஜியின் திரையுலகக் கொடி பறந்தது. 2-வது பாகத்தில், திராவிடம் முதல் தேசியம் வரையில் சிவாஜியின் அரசியல் சார்பு பற்றிப் பேசப்பட்டுள்ளது. திமுகவிலிருந்து வெளியேறியது, காமராஜருடனான நட்பு, எம்ஜிஆருடனான உறவு, சிவாஜி மன்றம் என்கிற அமைப்பின் பின்னால் இருந்துகொண்டு ஆற்றிய சமூகத் தொண்டு என சிவாஜி ஆவணக் காப்பகமாகத் திகழ்கிறது இந்தப் புத்தகம்.

- மானா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in