நூல் நோக்கு: பெரியாரிய மல்லி வாசம்!

நூல் நோக்கு: பெரியாரிய மல்லி வாசம்!
Updated on
1 min read

வார இதழ் ஒன்றில் வந்த தொடர்கதை என்று ஒற்றை வரியில் சாதாரணமாகச் சொல்லிவிட்டுக் கடந்துபோக முடியவில்லை இந்த நாவலை. பேராசிரியர் சரசுவதி அடிப்படையில் பெரியாரியச் சிந்தனையாளர். அதன் தாக்கம் இந்தக் கதை முழுக்கவும் நிரம்பித் ததும்புகிறது. வழக்கமான தொடர்கதை அம்சங்கள், கவர்ச்சிக் கெக்கலிப்புகள் ஏதுமில்லாமல் பாசாங்கற்ற எழுத்தாக திகழ்கிறது நாவல்.

மல்லி என்கிற பெண்ணின் வாழ்க்கையை சுவாரசியம் மிகுந்த நாவலாக்க ஆசிரியர் எடுத்துக்கொண்ட களம் சமூக அக்கறை கொண்டதாக இருப்பதுடன், இதில் வரும் பாத்திரங்கள் எல்லாமே விளிம்பு நிலை மக்களின் மீது பேரன்பு கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இன்று பெண்கள் படிக்கிறார்கள். பணிக்கும் செல்கிறார்கள். ஆனால் அதுமட்டும் போதாது சமூக சிந்தனையுடன், அரசியல் கண்ணோட்டத்துடன் பெண்கள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஆசிரியர். பெரியாரிய பெண்ணியக் கருத்துகளால் இன்னும் பல தலைமுறைகளுக்கான வாசத்தைக் கொண்டிருக்கிறாள் மல்லி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in