

மராத்தி நாடகங்கள் முதல் புகழ்பெற்ற இயக்குநர்களின் படங்கள் வரை பல்வேறு பாத்திரங்களில் தனி முத்திரை பதித்தவர் ஸ்மிதா பாட்டீல்.
வெறும் 31 வயதில் பிரசவத்தின்போது உயிர்நீத்த ஸ்மிதாவின் வாழ்க்கை ஒரு வாண வேடிக்கையாய் வர்ணஜாலமிட்டு முடிந்து போனது பெரும் துயரம்தான். மும்பை தொலைக்காட்சியில் மராத்தி செய்தி வாசிப்பவராக வெளிச்சத்துக்கு வந்த அவர், குறுகிய காலத்துக்குள்ளேயே மாற்று சினிமா, பொது சினிமா என இரண்டு தளங்களிலும் தன் நடிப்பால் தனியிடம் பிடித்தார்.
அவரது கலை வாழ்க்கையை உணர்ச்சிகரமான எழுத்துகளில் வடித்துள்ளார் பேராசிரியர் மைதிலி ராவ்.