

தமிழின் முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர்களுள் ஒருவரான பேராசிரியர் தொ. பரமசிவன் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.
அவர் எழுதியது மட்டுமல்லாமல் அவரது நேர்காணலும் இதில் தொகுக்கப்பட்டுள்ளது. தொ.பரமசிவனின் உரையை அவரது மாணவர்கள் கேட்டு எழுதியும் இதில் சேர்த்துள்ளனர்.
தமிழ்ச் சமூகம் குறித்து உரைக்க தொ. பரமசிவனுக்கு இந்தப் பிறவி போதாது என்பதுபோல தொகுப்பு முழுக்க சுவாரசியமும் வியப்பும் தரும் அரிய தகவல்களை வாசகர்களுக்கு வழங்கியுள்ளார்.
திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு தொ.பரமசிவன் வழங்கியிருக்கும் முன்னுரை சிறப்பான ஒன்று. பொருநை நதி என்னும் சிறிய கட்டுரையில் அவர் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளைச் சுவையுடன் எடுத்துரைத்திருக்கிறார்.
21 கட்டுரைகள் கொண்ட இந்தத் தொகுப்பு தமிழ்ச் சுவையுடன் பண்பாட்டின் கூறுகளையும் வாசகர்களுக்குத் தருகிறது. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தொ.பரமசிவன் குறித்து எழுதியிருக்கும் கட்டுரையும் இதில் தொகுக்கப்பட்டுள்ளது.
உரைகல்
தொ. பரமசிவன்,
விலை: ரூ. 130,
வெளியீடு:
கலப்பை பதிப்பகம், சென்னை 26.
தொலைபேசி: 9444838389