பிறமொழி நூலறிமுகம்: ஒரு சிறைக்கைதி பேசுகிறார்

பிறமொழி நூலறிமுகம்: ஒரு சிறைக்கைதி பேசுகிறார்
Updated on
1 min read

தமிழீழ விடுதலைப் போரில், விடுதலைப் புலிகளால் எட்டு ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை கப்பற்படையைச் சேர்ந்த முக்கியமான அதிகாரி கமாடோர் அஜித் பொயகோடாவின் நினைவலைகளைப் பதிவு செய்துள்ளது இந்நூல்.

இலங்கையின் மிக நீண்ட உள்நாட்டுப் போரில் நிலவிய சவால்களை உள்ளார்ந்த உணர்வோடு இதில் மிக நெருக்கமாக வெளிப்படுத்துகிறார் கமோடோர் அஜித். அந்தப் போரில் மறைந்து போன வாழ்க்கைகளை நினைவுகூர்கையில், தான் எதிர்கொள்ள நேர்ந்த அனுபவங்களை வாழ்க்கையோடு இயைந்த ஒன்றாகக் கருதிய மனநிலையுடன் அவர் விவரிப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.

மனிதன் தன்னைச் சார்ந்தவற்றோடு வைக்கும் உறவின் ஆழத்தை இது வெளிப்படுத்தும் அதே நேரத்தில் போரினால் நம்பிக்கை, பொறுமை, சமூக உறவுகள் ஆகியவை சின்னாபின்னமாவதையும் சமூகம் எதிர்கொள்ள நேர்வதையும் மிக அழுத்தமாக வெளிப்படுத்துவதாகவும் இந்நூல் அமைகிறது. போரின் மறுபுறத்தைக் காண நினைப்பவர்களுக்கானது இந்நூல்.

எ லாங் வாட்ச், வார், கேப்டிவிடி அண்ட் ரிட்டர்ன் இன் ஸ்ரீலங்கா- கமோடோர் அஜித் பொயகோடா- சுனிலா கலப்பாட்டி ஹார்ப்பர் காலின்ஸ் விலை : ரூ. 350/-

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in