நூல் நோக்கு: பாரதிதாசனின் நாடகத் தமிழ்

நூல் நோக்கு: பாரதிதாசனின் நாடகத் தமிழ்
Updated on
1 min read

பாரதிதாசனின் கவிதைகள் ஆய்வு செய்யப்பட்ட அளவுக்கு அவரது நாடகங்கள் ஆய்வு செய்யப்படவில்லை எனும் பெருங்குறையை நீக்கும் வண்ணமாக இந்நூல் வெளிவந்துள்ளது.

கவிதைகளில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தியதைப் போலவே, நாடகங்களிலும் தனது சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் பரவலாகக் கொண்டுசென்ற பெருமைக்குரியவர் பாரதிதாசன். பாரதிதாசன் எழுதி நூல் வடிவம் பெற்ற 32 நாடகங்களும், நூல் வடிவம் பெறாத நான்கு நாடகங்களும், கையெழுத்துப் பிரதியாகவே இருந்த பதினோரு நாடகங்களும் என மொத்தம் 47 நாடகங்களையும் ஆய்வு செய்து எழுதியுள்ளார் ச.சு. இளங்கோ. பாரதிதாசனின் நாடகங்களில் மேலோங்கியிருந்த பெண்ணுரிமை, தமிழ் உணர்வு, சுயமரியாதை, பகுத்தறிவு ஆகிய சிந்தனைகளைப் பற்றி விரிவான முறையில் ஆய்வு செய்துள்ளார்.

நூலின் நிறைவுப் பகுதியில் இடம்பெற்றுள்ள பாரதிதாசனின் கையெழுத்துடன் கூடிய விளக்க நிழற்படங்கள் அவரது நாடகத் திறனுக்குச் சான்றாக அமைகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in