ஆஹா!- ஆங்கிலத்தில் பாரதி

ஆஹா!- ஆங்கிலத்தில் பாரதி
Updated on
1 min read

உலக மொழிகளில் உள்ள அறிவுச் செல்வங்க ளெல்லாம் தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்று கனவு கண்டவர் பாரதி.

ஆனால், அவருடைய கவிதைகள் இதுவரை பெரிய அளவில் உலக மொழிகளில், குறிப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் சாகித்ய அகாடமி இந்த ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டிருக்கிறது. 8 மொழிபெயர்ப்பாளர்களின் உழைப்பில் பாரதியின் கவிதைகள் ஒருங்கே மொழிபெயர்க்கப்பட்டிருப்பது சாதனைதான்.

மொழிபெயர்ப் புக்கு எளிதில் பிடிபடாதவர் பாரதி என்றாலும், இது போன்ற முயற்சிகள் உலக அரங்கை நோக்கி பாரதியைக் கொண்டுசெல்வதில் முக்கியமான படிக்கற்கள்!

Poems: Volume -1

Subramania Bharati

Edited by: Dr. Sirpi Balasubramaniam

Rs. 950, Sahitya Akademi

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in