Last Updated : 27 Oct, 2013 02:43 PM

 

Published : 27 Oct 2013 02:43 PM
Last Updated : 27 Oct 2013 02:43 PM

சில்வியா எனும் கவிதாயினி

சில்வியா பிளாத் மனதில் பட்டதை கவித்துவமாக கண்ணீரோடு உலகுக்கு வடித்துக்கொடுத்து விட்டுப்போன கவிஞர்.

வெறும் முப்பது வருடங்கள் மட்டுமே வாழ்ந்த அவர் எழுத்து ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது. அவரின் கவிதைகள் அவரின் வாழ்வின் சோகங்களைக் கரைத்து எழுதப்பட்டவை.

தன் உணர்வை வெளிக்கொணரும் CONFESSIONAL POETRY வகையான அவரின் கவிதைகள் அபாரமானவை. எட்டு வயதில் செல்ல அப்பாவை இழந்தவர் அவர்; பின்னர் அன்பு செய்த நார்ட்டன் என்பவரரும் நோயில் விழ, நொந்து போனார். அடிக்கடி தற்கொலை எண்ணம் வரும் சில்வியாவுக்கு.

அந்த இழப்பை விட்டே வெளிவராத அவர், ஹுக்ஸ் என்பவரை திருமணம் கொண்டார்; தன் கணவர் மீது எல்லையில்லா அன்பு காட்டினார் சில்வியா. அந்த மனிதருடனான மணவாழ்வில் இரண்டு குழந்தைகள். ஆனால், கணவருக்கு பிற பெண்களுடன்

தொடர்பு இருந்தது. அன்புக்காக ஏங்கிய சில்வியா நொறுங்கிப்போனார். கணவரை விட்டு விலகி இருபது வயதிலேயே பிள்ளைகளை தனியாக வளர்க்க ஆரம்பித்தார்.

அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து கவிதை எழுதிவிட்டு, பின்னர் பிள்ளைகளை கவனித்துக்கொண்டே வலியோடு வாழ்க்கை நடத்தினார்; மனவீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட இவர் அடிக்கடி தற்கொலை முயற்சிகள் செய்த வண்ணம் இருந்தார்; ஆனாலும், இவரின் கவிதைகளில் ஒரு தனித்துவம், வலி இருக்கும். முப்பது வயது முடிந்த நிலையில் இரண்டு குழந்தைகளையும் ஈரத்துண்டில் சுற்றி வைத்துவிட்டு இன்னொரு அறையில் தீமூட்டிகொண்டு, மனப்பிறழ்வு அதிகமாகி தற்கொலை செய்துகொண்டார்.

'நெருப்பிலும் தங்கத்தாமரை மலரும்' என ஹுக்ஸ் அவர் கல்லறையில் எழுதி வைத்தார்; அந்த வரிகளை சில்வியாவின் ரசிகர்கள் பலமுறை அழித்து இருக்கிறார்கள். அவர் இறந்து இருபது வருடங்கள் கழித்து புலிட்சர் பரிசும் வழங்கப்பட்டது அவருக்கு!

சில்வியாவின் கவிதைகள் இன்றும் கொண்டாடப்படுகின்றன. இந்த கருணை எனும் அவரின் கவிதை அவரின் வாழ்வை சொல்லும்:

'நீ இங்கு தேநீர் கோப்பையோடு வருகிறாய்

நீராவி மாலை சூடி இருக்கிறது அது

உதிரத்தின் ஊற்றாக பொங்கிப்பாய்கிறது கவிதை

எதுவும் அதை தடுப்பதற்கில்லை

ஆனால் நீ எனக்கு

இரண்டு ரோஜா, இரண்டு மழலையை தருகிறாய்'

வார்த்தைகளால் வாழ்வை அளந்தவரின் கவிதைகள் பலர் நெஞ்சங்களில் மங்காமல் வாழ்கின்றன.

அக்டோபர் 27 - சில்வியா பிளாத் பிறந்த தினம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x