நூல் நோக்கு: ஒரு வாசக சாட்சி

நூல் நோக்கு: ஒரு வாசக சாட்சி
Updated on
1 min read

தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்தவரை, சிறந்த வாசகர்களும் படைப்பாளிகளும்தான் அதிகமாக விமர்சகர்களாகவும் செயல்பட்டுள்ளனர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் எழுதிவரும் சா. தேவதாஸ் அர்ப்பணிப்புணர்வுடன் உலக இலக்கியத்தையும் எழுத்தாளுமைகளையும் மொழிபெயர்த்து அறிமுகம் செய்துவரும் விமர்சகர். சிறந்த வாசகர் என்பவர் ஒரு சிறந்த சாட்சி என்பதன் அடிப்படையில் ‘எனது எழுத்து எனது சாட்சியம்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. இலக்கியம் தாண்டி அறிவியல், சமகால அரசியல், ஆன்மிகம் என இவர் கொண்டுள்ள விரிவான அக்கறைகளை வாசகர்களிடமும் பகிர்ந்துகொள்ளும் கட்டுரைகள் இவை.

தேடலும் அர்ப்பணிப்பும் விசாரணையும் சுயபரிசீலனையும் கொண்ட எவரது வாழ்க்கையும் இலக்கியத் தன்மையும் ஆன்மிக சாரமும் கொண்டதுதான் என்பதை குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி தொடர்பாக எழுதியுள்ள கட்டுரை தெரிவிக்கிறது. அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பற்றி இவர் எழுதிய அறிமுகம், அத்தனை பின்னடைவுகளுக்கிடையிலும் மானுடத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பை ஆற்றமுடியும் என்பதற்கான உதாரணமாகத் திகழ்கிறது.

- ஷங்கர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in