நூல் வெளி: கனவுகள் பலவிதம்

நூல் வெளி: கனவுகள் பலவிதம்
Updated on
1 min read

‘இன்னொருவனின் கனவு’என்ற இந்த நூல் கனவுத் தொழிற்சாலை என அழைக்கப்படும் திரைப்படத் துறை சார்ந்த விஷயங்களைப் பேசும் நூல். இந்நூலுக்குப் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் முன்னுரை எழுதியுள்ளார். வழக்கமாக சினிமா பற்றிய நூல் என்றால் கலைஞர்களைப் பற்றியோ குறிப்பிட்ட படம் உருவான விதம் பற்றியோ கட்டுரைகள் இடம்பெறுவது வாடிக்கை. ஆனால், வழக்கமான பாணியில் இருந்து விலகிக் கனவுத் திரைப்படங்கள் எப்படி உருவானது என்கிற வேரைத் தேடி, தகவல்களைத் திரட்டித் திகட்டும் அளவுக்கு அள்ளித் தந்திருக்கிறார் நூல் ஆசிரியர் குமரகுருபரன். முதல் நூலையே முத்திரை நூலாகத் தந்துள்ளார் குமரகுருபரன்.

ஒரு திரைப்படம் பார்வையாளன் கனவில் எப்படிப் பார்க்கப்படுகிறது. ஒரு படைப்பாளியின் கனவில் எப்படி விரிகிறது, விமர்சகன் கனவில் எப்படி மதிப்பிடப்படுகிறது என்பதை விரிவாகவும் விளக்கமாகவும் எழுதியிருக்கிறார். நூலுக்கு உதவியாகச் சமகாலத்துப் படங்கள் பலவற்றைக் குறிப்பிட்டு எழுதியிருப்பது வாசிப்புக்குச் சுவாரசியத்தைத் தருகிறது.

கனவுத் தொழிற்சாலையில் இருந்து உருவாகும் சினிமா, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கனவுதான். அந்தக் கனவுகளைத் தீவிரமாக அலசி ஆராய்கிறது இந்நூல்.

நூல் : இன்னொருவனின் நூல்
ஆசிரியர் : குமரகுருபரன்
விலை : ரூ.220
வெளியீடு : அந்திமழை
முகவரி : 24ஏ, முதல் தளம், கணபதிராஜ் நகர், காளியம்மன் கோவில் தெரு, விருகம்பாக்கம், சென்னை - 92 கைப்பேசி : 9443224834

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in