

கலை விமர்சகர் தேனுகா எழுதிய கட்டுரைகளின் முழுத் தொகுதியான ‘தோற்றம் பின்னுள்ள உண்மைகள்’ நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
மரபு மற்றும் நவீன ஓவியம், இசை, சிற்பம், கட்டிடக்கலை, இலக்கியம், தத்துவம் ஆகிய பல தலைப்புகளில் தன் வாழ்நாள் முழுக்க எழுதிய கட்டுரைகளை ஒரே நூலாகத் தொகுத்துள்ளார்.அவரது இறப்புக்குமுன் வெளிவந்த இந்நூலை நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒவ்வொரு கட்டுரையாகப் படித்துவருகிறேன்.
‘ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்’, ‘பறவையின் நிழல்’ ஆகிய கவிதைத் தொகுதிகளைத் தொடர்ந்து, எண்களைத் தலைப்பாகக் கொண்டு ஃபேஸ்புக்கில் நான் எழுதிய கவிதைகள் ‘எண்ணும் எழுத்தும்’ என்ற தலைப்பிலும், சிறுநகர வாழ்வு சார்ந்த 100 குறுங்கவிதைகள் அடங்கிய மற்றொரு நூலும் வெளிவரவுள்ளன.