

ஒரு துண்டுக் காகிதத்தைக் கூட கொடுக்கவோ, அங்கேயே போட்டுட்டு வரவோ மனசில்லாமல் 336 கிலோ புத்தகம் + மாத இதழ்கள் (இப்பொழுது அச்சில் இல்லாத வார்த்தை இதழ்கள், 2004-லிருந்து காலச்சுவடு, 2006-லிருந்து வந்த உயிர்மை இதழ்கள், அவ்வப்போது வாங்கிச் சேர்த்த காட்சிப்பிழை, அந்திமழை) ரூ.50,000 செலவழித்து சவுதியிலிருந்து கொண்டுவந்துட்டேன்.
50,000 செலவழித்துக் கொண்டுவந்ததற்கு அதில் பாதி செலவழித்து இங்கேயே வாங்கி இருக்கலாம்னு மனைவியிடமிருந்து ஒரே அறிவுரை.
ஓரளவு உண்மையும் கூட. ஆனா படித்த புத்தகங்களை எப்படி விட்டு வருவது? மனசு கேட்குமா? இனிமேல் நல்ல புத்தக அலமாரி செய்து அடுக்கி வைக்கணும். தனியாக ஒரு அறையை நூலகமாக மாற்றணும்!
- அ.வெற்றிவேலின் ஃபேஸ்புக் பதிவு