

மாடுகளை வளர்ப்புப் பிராணிகளாக மாற்ற மனித இனம் மேற்கொண்ட முயற்சிகள் பல. மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இணக்கத்தின் வெளிப்பாடுதான் ஏறுதழுவுதல். சரியான இணக்கம் இருந்தால் மட்டுமே மாடுகளை உழவில் ஈடுபடுத்த முடியும். மனிதர்களுக்கும் காளைகளுக்கும் இடையே நிகழும் விளையாட்டுதானே தவிர ஏறுதழுவுதல் என்பது வீரத்தைக் குறிப்பது அல்ல. உழைக்கும் மக்களிடமிருந்தே பண்பாடுகளைப் பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு தேசிய இனத்துக்குமான பண்பாட்டு அடையாளங்களை முன்னெடுப்பதுதான் ஒரு பண்பாட்டின் மீதான மேலாதிக்கத்தை தடுக்கும் வழி. தமிழ் நிலத்தின் வேளாண்மைச் செயல்பாடுகள் தீவிரமடைய வேண்டுமெனில் அதனோடு தொடர்புடைய ஏறுதழுவல் சடங்கை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது. பண்பாட்டுக் கருத்துக்களை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து இந்த புத்தகம் நமக்கு தெளிவாக விளக்குகிறது.