Published : 01 Nov 2014 12:20 PM
Last Updated : 01 Nov 2014 12:20 PM

மொழியியல்: ஓர் அறிமுகம்

தமிழுக்கு மொழியியல் தேவை இல்லை என்பது போன்ற கருத்துகள் இங்கு உண்டு. இந்தப் பார்வைகளைப் புரட்டிப்போடுகிறது அடையாளம் பதிப்பகம் வெளி யிட்டிருக்கும் ‘மொழியியல் தொடக்கநிலையினருக்கு’ புத்தகம். டெரன்ஸ் கோர்டொனின் நூலைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப, குறிப்பாக இளைய தலை முறையினரைச் சென்றடையும் வகையில் மொழியியலை எளிமைப்படுத்தித் தந்திருக்கிறார் நாகேஸ்வரி அண்ணாமலை.

மொழிகள் செயல்படும் விதத்தில் தொடங்கி, மனிதர்கள் தங்கள் மொழியைக் கற்றுக்கொள்ளும் விதம், மொழியின் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு என மொழியின் பன்முகத் தன்மைகளை விளக்குகிறது இந்த நூல். சூசன் வில்மார்த்தின் கண்கவர் விளக்கப் படங்கள் இந்த நூலின் முக்கிய அம்சங்களுள் ஒன்று. சுவாரசிய மான மொழி நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூல், மொழியியலின் வீச்சைத் தெரிந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, எந்த நிலையினருக்கும் உதவும் ஒரு முக்கியக் கருவியாகும்.

- ம. சுசித்ரா

மொழியியல் தொடக்கநிலையினருக்கு
டெரன்ஸ் கோர்டொன்
தமிழில்: நாகேஸ்வரி அண்ணாமலை
விளக்கப்படம்: சூசன் வில்மார்த்
பதிப்பகம்: அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி- 621 310
தொலைபேசி: 04332- 273444
முதல் பதிப்பு: 2013
விலை: ரூ.160/-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x