புதினம் அல்ல, அறிவுநூல்

புதினம் அல்ல, அறிவுநூல்
Updated on
1 min read

ஆசிரியர் மா. முருகப்பனால் எழுதப்பட்ட இந்நூல் பலரது உதவியுடன் வடிவமைக்கப்பட்டது. இந்நூலில் கதையுடன் பல விளக்கப் படங்களும் உள்ளன. ஆசிரியர் எம்.பி..ஏ., எம்.எஸ்சி., பட்டம் பெற்றவர். அவரது அறிவை நாவல் முழுவதும் உணரலாம்.

குமரன், பிரியா, மனோஜ், ருக்காணி, பூங்கொடி ஆகிய கதாபாத்திரங்கள் நாவலில் முதன்மை பெறுகின்றன. ‘நவீனக் கல்வி மையம்’ தமது கோட்பாட்டிற்கு ஏற்ப அமைவதே இறுதி முடிவாகும். ஆயினும் நூல் முழுவதும் பால்டர், சத்யஜித் ராய், கணித மேதை இராமானுஜம், பெர்னாட் ஷா போன்ற அறிஞர் கூற்றுகள் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. 57 அத்தியாயங்கள் கொண்ட இந்நூல் விரைவாகப் படிக்கத்தக்காக அமைக்கப்பட்டுள்ளது.

இந்நூல் ஒரு புதினம் அல்ல. அறிவுநூலாகும்; சமுதாய மேம்பாட்டுக்கான, நடைமுறைத் தத்துவம் கொண்டது என முன்னுரையில் காதர்பாட்சா கூறுகிறார். நூலின் கருத்துகளின் அடிப்படை நோக்கம் பலன் விளைவிப்பது, அதன் தொடர் எண்ணம் – வார்த்தை – புரிதல் – இலக்கண பலம் என ஆசிரியர் விரிக்கிறார். நன்றியும் வணக்கமும் கூறும் ஆசிரியர் 30 கூற்றுகளில் நூலாக்கத்தை முன்னுரையில் அறிவுறுத்துகிறார்.

வெற்றிக்கனி: மா.முருகப்பன்

கலா கருணா பப்ளிகேஷன்ஸ், 11, முதல் தெரு, பக்தவத்சலம் நகர், அடையாறு, சென்னை-20 விலை: ரூ.75/- பக்கம் 370

தொடர்புக்கு: 9840516869

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in