

திருமதி க. கலைவாணி ராகவன் என்று தான் எழுத வேண்டும். திருமதி என்ற சொல்லுக்குப் பிறகு புள்ளி வைக்கக் கூடாது. ஆனால், ஒருவர் தன் பெயருக்கு முன் இடும் முதலெழுத்துக்குப் பிறகு (அதாவது தந்தை அல்லது கணவர் பெயரின் முதலெழுத்துக்குப் பிறகு) புள்ளி வைக்க வேண்டும். கலைவாணி என்ற பெயருக்கு முன்னே உள்ள ‘க’ என்ற எழுத்தை அடுத்துப் புள்ளி இருப்பதைக் காணவும்.
பொதுவாக, முழுமையாகக் குறிப்பிடப்படாத ஒரு சொல்லை, சொல் இன்னமும் தொடர்கிறது என்பதை உணர்த்த, புள்ளியைப் பயன்படுத்துகிறோம். (எ.டு.) புதுகை. செ. குணசீலன். ஒருவருடைய பெயருக்கு முன்னால் குறிப்பிடப்படும் அடைமொழியை அடுத்தும் அடைமொழிகளுக்கு இடையிலும் முனைவர் போன்ற பட்டங்களை அடுத்தும் புள்ளி தேவையில்லை. (எ.டு.) கவித்தேனி முனைவர் சி. தங்கதுரை.