டைகர் எனும் நாயகன்

டைகர் எனும் நாயகன்
Updated on
1 min read

பிரிட்டிஷ்காரர்களின் வருகைக்குப் பின்னர், அமெரிக்க நிலத்தில் இருந்த பூர்வகுடிகள் சந்தித்த கொடுமைகள் கணக்கில்லாதவை.

அன்றைய அமெரிக்க அரசாங்கத்தின் சட்டங் களும் அதிகாரமும் ‘வைல்ட் வெஸ்ட்’ எனப்படும் வன்மேற்கில் இருந்த கௌபாய் உலகில் எப்படி இருந்தன என்பதை அறிய உதவு கின்றன காமிக்ஸ்கள்.

இப்படிப்பட்ட சூழலில் 19-ம் நூற்றாண்டு இறுதி யில் நடந்த வரலாற்று பிரசித்தி பெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து, அத்துடன் ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தைக் கலந்து இந்தப் படைப்பை உருவாக்கியிருக்கிறார் ஓவியரும் கதாசிரியருமான ஜான் ஜிராடு.

பெல்ஜியத்தைச் சேர்ந்த இவர் கிட்டத்தட்ட 12 வருடங்கள் உழைத்து உருவாக்கிய படைப்பு இது. பிரெஞ்சில் வந்த இந்த ஐந்து பாகக் கதையை அருமையான நடையில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் லயன் காமிக்ஸ் எடிட்டர் விஜயன். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனுபவித்துப் படிக்க காமிக்ஸ் படைப்பு இது.

- மாயாவி.சிவா

என்பெயர் டைகர்

ஜான் ஜிராடு

தமிழில்: விஜயன்

(கறுப்புவெள்ளை பதிப்பு: ரூ.250/-; வண்ணப் பதிப்பு ரூ.450/-)

வெளியீடு: முத்து காமிக்ஸ், சிவகாசி-626189

தொடர்புக்கு: 98423 19755

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in