

இந்நூலில் சத்யஜித் ரேயின் தாத்தா உபேந்திரகிஷோர், அவரது மாமனார் துவாரகநாத் கங்குலி, அவரது சின்ன மாமியார் காதம்பினி கங்குலி, சகோ தரர் மகன் ஹேமேந்திர மோகன் போஸ், சத்யஜித் ரேயின் தந்தை சுகுமார் ரே ஆகியோர் இந்திய நவீனத்துவத்திற்கு ஆற்றிய பங்களிப்புகள் இந்த நூலில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. காலனியாதிக்க காலத் தில் இந்திய மண்ணில் முகிழ்த்த அச்சுக் கலை, அறிவியல் கண்டுபிடிப்புகள், சமூகச் சீர்திருத்தம், மருத்துவம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் இந்தத் தனியொரு குடும்பத்தின் பங்களிப்பை அறியும்போது வியப்பே மிஞ்சும். இந்நூல் வழங்கும் தகவல்களின் பின்னணியில் பார்க்கும்போது சத்யஜித் ரேயின் பன்முகத் திறமையில் இவர்களின் அனைவரின் சாயலும் படிந்திருப்பதை உணர முடிகிறது.
- வீ.பா. கணேசன்
த ரேஸ் பிஃபோர் சத்யஜித்
சந்தக் சென்குப்தா,
ஆக்ஸ்ஃபோர்டு,
விலை: ரூ. 995.