

ஆசிரியர் மாணவர் சம்பந்தப்பட்டது என்கிற ஒற்றைப் புரிதலைத் தாண்டி, இன்று பொதுத்தளத்தில் ஒரு விவாதப் பொருளாக மாறியிருக்கிறது கல்வி.
அதுவும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழலில் இந்நூல் வெளியாகியிருப்பது மிகப் பொருத்தமானதே. தமிழக கல்வித் தளத்தில் தொடர்ந்து இயங்கிவரும் பேராசிரியர் கல்விமணி தொகுத்துள்ள இந்நூலில், டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம், முன்னாள் நீதிபதி கே.சந்துரு, மருத்துவர் ராமதாஸ், டாக்டர் வா.செ. குழந்தைசாமி ஆகியோரின் கல்வி குறித்த கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
நீட் நுழைவுத் தேர்வு பற்றியும், அது தமிழக மாணவர்களிடையே உருவாக்கிய உளவியல் சார்ந்த பிரச்சினைகள் பற்றியும் சில கட்டுரைகள் பேசுகின்றன. தமிழ் வழிக் கல்வி, ஆங்கில வழிக் கல்வி தேவையா?, மாநிலப் பாடத்திட்டம் குறித்தும் விரிவாக பேசுவதற்கான தளமமைத்து தந்துள்ளது. நல்ல முயற்சி, இன்னும் தரமாக வெளியிட்டிருக்கலாம்.