அதல குதலம்: ஒரு ‘பகுதிநேர’ அரசியல்வாதியின் சுயசரிதை!

அதல குதலம்: ஒரு ‘பகுதிநேர’ அரசியல்வாதியின் சுயசரிதை!
Updated on
1 min read

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவர் தலைவர் டாக்டர். ந.சேதுராமனின் அதிரடி சுயசரிதை வெளியாகியிருக்கிறது ‘வீடு தோறும் வெற்றி’. தன்னோடு சேர்த்து, தான் சந்தித்தவர்கள், பழகியவர்கள், உடன் வாழ்பவர்கள் எல்லோரையும் எதற்கும் அஞ்சாமல் ‘டேமேஜ்’ செய்திருப்பது இந்தச் சுயசரிதையின் சிறப்பு!

பள்ளிக்கூடத்தில் கூடப் படித்த செவத்த பொண்ணுக்கு காதல் கடிதம் எழுதி மாட்டியது, மருத்துவக் கல்லூரியில் படித்தபோது எலும்புக்கூடு வாங்கக் காசில்லாமல் சுடுகாடு சுடுகாடாகப் போய் எலும்புகளைப் பொறுக்கியது என்று ஆரம்பிக்கும் இந்தச் சுயசரிதை, ‘மீனாட்சி மிஷன் மருத்துவமனை’யைத் தொடங்கி எப்படி சேதுராமன் கோடீஸ்வரர் ஆனார் எனும் கதையைச் சொல்கிறது.

மருத்துவமனைக்கு குறைந்த விலைக்கு இடம் வாங்கிய ரகசியம், மருத்துவமனை திறப்புவிழாவுக்கு முதல்வர் கருணாநிதியை வரவழைக்கக் கொடுத்த ‘விலை’, வருமான வரித்துறை ரெய்டை சமாளிக்கும் நுட்பம், ‘பரீட்சைக்குப் படிக்கவே மாட்டேன் பணம் கொடுத்து எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித்தா’ என்ற மகளின் அடம், ‘உனக்கு எய்ட்ஸ் வந்துவிட்டது’ என்று குற்றஞ்சாட்டிய மனைவியிடம், ‘இல்லை’ என்று நிரூபிக்க பட்ட பாடு, மகன்களின் அனுமதியுடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட சூட்சமம், மூன்றாவது மனைவி நடிகை புவனேஸ்வரியின் பாராட்டுப் பத்திரம் என்று செம ரகளை. இறுதிப் பகுதி அவரது அரசியல் வாழ்க்கை பற்றியது. அது இன்னும் காமெடி. மாறுவேடத்தில் சேதுராமன் ஆர்ப்பாட்டம் நடத்திய கதை நகைச்சுவையின் உச்சம்!

- கே.கே.எம்.

வீடு தோறும் வெற்றி
டாக்டர் ந. சேதுராமன்
விலை: ரூ.350
கற்பகம் புத்தகாலயம், சென்னை-17
தொடர்புக்கு: 044 24314347

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in