

எஸ்.எம்.ஏ.ராம் 1972-ஆம் ஆண்டில் எழுதிய ‘ரயில் காவேரிப் பாலத்தில் வந்து கொண்டிருக்கிறது’ எனும் முதல் சிறுகதைக்காக எழுத்தாளர் விந்தனிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றவர். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இது. கடந்த 44 ஆண்டுகளாக அவ்வப்போது எழுதிக்கொண்டிருந்தாலும், குறைந்த அளவிலான கதைகளைத்தான் எழுதியிருக்கிறார்.
கடந்துபோன வாழ்வின் நினைவுப் பதிவுகளைப் பேசும் கதைகளை மனம் தோய்ந்து எழுதியுள்ளார் ஆசிரியர். வீட்டின் கொல்லைப்புறத்தில் ஓடும் சாக்கடை நாற்றத்தை எந்த சங்கடமும் இல்லாமல் கடந்துபோகும் மனிதர்களை லேசான எள்ளலோடு சாடும் ‘ஹோமம்’ கதையும், பாட்டியின் இன்னொரு உயிராய் இருந்த தாத்தா காலத்து பீரோவை கடைசிவரை பார்க்க முடியாமலேயே செத்துப்போகும் பாட்டியும் ஏக்கத்தைப் பேரனின் வழியாகச் சொல்லும் கதையும் நம் மனசை என்றும் விட்டு அகலாதவை. இவர் இன்னும் நிறைய எழுதியிருக்கலாமே என்கிற மனக்குறை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தாத்தா காலத்து பீரோ - எஸ்.எம்.ஏ.ராம்
விலை: ரூ.120/-
போதிவனம், சென்னை-600014 9841450437