

வெளியிடப்படாத கவிதைகளுக்காக வழங்கப்படும் "பேட்ரிக் கெவன்நாக் கவிதை" விருதுக்கு அமெரிக்கவாழ் இந்தியரான ரபீக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் 112 கவிஞர்களின் கவிதைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், ரபீக்கின் "இன் அனதர் கன்ட்ரி" (வேறொரு நாட்டில்) என்ற ஆங்கிலக் கவிதை முதல் பரிசுக்கு தகுதி பெற்றது.
அயர்லாந்தைச் சேர்ந்த கவிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருது முதல்முறையாக இந்தியாவைச் சேர்ந்த ரபீக்குக்கு வழங்கப்பட்டிருக்கிறது. காஷ்மீரைச் சேர்ந்த அவர் கடந்த 30 ஆண்டுகளாக கவிதை எழுதி வருகிறார்.