

தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வரும் செப்டம்பர் 16-ல் 95-ம் வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரைக் கவுரவிக்கும் வகையில் அவருடைய படைப்புலகம் குறித்த ஓர் ஆய்வு நூலை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம், க.பஞ்சாங்கம், சு.ஆ.வெங்கிட சுப்புராய நாயகர் ஆகியோர் அடங்கிய குழு இந்த நூலை ஒருங்கிணைக்கவுள்ளது. இதற்காக குழந்தை இலக்கியத்திற்குக் கி.ரா.வின் கொடை, கி.ரா. எழுத்துக்களில் நிலக் காட்சிகள், கி.ரா. எழுத்துக்களில் இனவரைவியல் கூறுகள், பண்பாட்டு மானுடவியல் நோக்கில் கி.ரா.வின் படைப்புகள், இயற்கையை எழுதுதலும் கி.ரா.வின் படைப்புக்களும், கோபல்ல கிராமம்: புலம்பெயர்தலின் வலியும் வாழ்வும் முதலான 41 தலைப்புகளைக் குழு தேர்ந்தெடுத்துள்ளது. இவை தவிர, வேறொரு தலைப்பிலும் எழுதி அனுப்பலாம். கட்டுரைகள் யுனிக்கோடில் இருக்க வேண்டும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: drpanju49@yahoo.co.in, jpirakasam@gmail.com, vengadasouprayanayagar@gmail.com,
திருச்சியில் மாற்று நாடக இயக்கத்தின் 5-ம் ஆண்டு நாடக விழா மே 28-31 வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் நாடக ஆளுமைகளான மு.ராமசாமி, ஞாநி, ரெஜின் ரோஸ், நந்தினி ஆகியோர் விருதுகள் வழங்கிக் கவுரவிக்கப்படுகிறார்கள். நாடகக் கலைஞர்களான கி.பார்த்திபராஜா, கலைராணி, ஆனந்தக்கண்ணன், வேலு சரவணன் ஆறுமுகம் ஆகியோர்களின் நாடகங்கள் விழாவில் மேடையேற்றப்படவுள்ளன. மேலதிகத் தொடர்புக்கு: 9094107737, 9786145099