

மறைந்த முன்னோடி எழுத்தாளர் அசோகமித்திரன் பெயரில் சிறுகதைக் காக ஆண்டுதோறும் விருது வழங்க ‘கோலம் அறக்கட்டளை’ முடிவுசெய்துள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதையை எழுதிய எழுத்தாளருக்குப் பாராட்டிதழுடன் ரூ .10 ஆயிரம் சன்மானமாகவும் வழங்கப்படும். அசோகமித்திரனின் பிறந்த நாளான செப்டம்பர் 22 அன்று விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். 2016-17க்கான விருதுக்கு ஜூலை 31 வரை வெளியான சிறுகதைகளை அனுப்பலாம். எதிலும் இதுவரை வெளிவராத கையெழுத்துப் பிரதிகளையும் அனுப்பலாம். எவரும் எவருடைய சிறுகதையையும் பரிந்துரைக்கலாம். எழுத்துபூர்வமாகவே பரிந்துரை அனுப்பப்பட வேண்டும். சிறுகதைப் பிரதியுடன் எழுத்தாளர் பற்றிய குறிப்பும் முகவரியும் அவசியம்.
முகவரி
கோலம் அறக்கட்டளை
மே/பா ஞாநி, 39, அழகிரிசாமி சாலை
கலைஞர் கருணாநிதி நகர்
சென்னை-600 078.