

கண்ணுக்குப் புலப்படாதது குறித்த அச்சமும் தீமையும் ஒன்றோடொன்று போட்டிபோட்டு வளர்பவை. அதே நேரத்தில் அவை எத்தகைய தீமையானது என்பதையும் நல்லனவற்றுக்கும் தீயனவற்றுக்கும் இடையிலான முரண்பாட்டை விளக்குவதாகவும் தீய செயல்களே அமைகின்றன. குறிப்பாக அதிகாரமும் தீமையின் கட்டமைப்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணையும்போது வசதி படைத்தோர்க்கு வலுசேர்த்து, சட்டபூர்வமான செயலுக்கும் தீய செயலுக்கு இடையே விசித்திரமான, முற்றிலும் முரணானதோர் உறவையும் அது வெளிப்படுத்துகிறது.
வடகிழக்கு இந்தியாவின் கலாச்சாரப் பின்னணியில் இலக்கியம், சமூக-பண்பாட்டு இயக்கங்கள், அரசியல் கொள்கைகள் ஆகியவற்றில் அதன் பிரதிபலிப்பைக் கூறும் நூல் இது. தீமை என்ற கருத்தாக்கத்தையும் பொதுவெளிகளில் எவ்வாறு அது பிரதிபலிக்கிறது என்பதையும் மிகச் சிறப்பாக அலசும் நூல் இது. ‘உள்ளூர் அளவிலும்’, ‘உலக அளவிலும்’ தீமையை எதிர்த்துப் போராடுவதற்கு போர், பயங்கரவாதம், பிராயச்சித்தம் ஆகியவற்றை எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது.
- வீ.பா. கணேசன்