Last Updated : 25 Jun, 2016 10:44 AM

 

Published : 25 Jun 2016 10:44 AM
Last Updated : 25 Jun 2016 10:44 AM

ம.பொ.சி. வாழ்க்கைச் சித்திரங்கள்

அவர் தமிழுக்குத் தொண்டர்; நான் அவருக்குத் தொண்டன்’ எனப் பாவேந்தர் பாரதிதாசனால் பாராட்டப்பெற்ற பெருமைக்குரியவர் ம.பொ.சிவஞானம்.

மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி, தமிழ்நாடு என்றழைக்கப்பட வேண்டுமென்று போராடியவர். திருப்பதியைத் தமிழகத்துடன் இணைக்க அவர் போராடியதன் விளைவாகத்தான் திருத்தணி தமிழகத்துக்குக் கிடைத்தது. தமிழ் மொழி, தமிழர் நலன் என்பதையே மூச்சாகக் கொண்டு 1946-ல் தமிழரசுக் கழகத்தைத் தொடங்கினார். ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தின்மீது அவர் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக ‘சிலம்புச் செல்வர்’ என்று பாராட்டப்பட்டார்.

ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் அவரோடு இணைந்து செயல்பட்ட கவிஞர் புவியரசு, அவரை முதன்முதலாகத் தான் சந்தித்த அனுபவம் தொடங்கி, இன்றைய இளைய தலைமுறை ம.பொ.சி. பற்றி அறிந்துகொள்ள வேண்டிய பல சுவையான சம்பவங்களை வரலாற்றின் வழி நின்று, அழகான சித்திரம்போல் காட்சிப்படுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x