

விழாவில், ‘சொல், இசை, பொருள்’ என்ற அமர்வில் கவிஞர் வைரமுத்து, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் இருவரும் கலந்துரையாடினர். அமர்வில் வைரமுத்து பேசியது:
“திரைப் பாடல்களைக் குறைத்து மதிப்பிடுவது சாத்தியமற்றது. அவற்றை இலக்கியத் தரத்துடன் இல்லை என்று புறந்தள்ளிவிட முடியாது. திரைப் பாடல்களே பாமரர்களின் கவிதையாகவும் இலக்கிய மாகவும் திகழ்கின்றன. தொடக்கக் காலத்தில் தேசியவாதிகளாலும், பிறகு பொதுவுடமைவாதிகளாலும் அதற்குப் பிறகு திராவிட இயக்கச் சிந்தனையாளர் களாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டது தமிழ்த் திரையுலகம். தமிழ் மண்ணிலிருந்தும் மக்களிட மிருந்தும் பெற்ற உத்வேகத்திலிருந்தே சமூகத்துக்குப் பொருத்தமான பாடல்களை நான் எழுதினேன்” என்றார் வைரமுத்து.