

எழுத்தாளனின் பேனாவைப் போல எத்தனை எளிமையாக ஒளிப்பதிவுக் கருவி மாறுகிறதோ அப்போதுதான் சினிமா கலையாகும் என்று பிரெஞ்சு இயக்குனர் ரெனாயிர் சொல்வார். அந்தக் கனவை சாத்தியப்படுத்தி, சினிமா எடுப்பதை தற்போதைய டிஜிட்டல் காமிராக்கள் எளிமையாக்கியுள்ளன.
சினிமாவின் எதிர்காலமாக இருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைத் தெரிந்துகொள்வதற்குத் தமிழில் எளிமையானதும் முழுமையானதுமான ஒரு நூல் இல்லை என்ற குறையைப் போக்கியிருக்கிறது ஒளிப்பதிவாளர் மற்றும் எழுத்தாளரான சி.ஜெ. ராஜ்குமாரின் 'பிக்சல்' புத்தகம். திரைப்படத்துறையில் ஆர்வமுள்ளவர்கள், பணிபுரிபவர்கள், ஊடகக்கல்வி கற்கும் மாணவர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் சினிமாத் தொழில்நுட்பம் குறித்த அனைத்துத் தகவல்களையும் இப்புத்தகம் தருகிறது.
ஒளிப்பதிவு, ஒளி இயக்கம், போஸ்ட் புரொடக்ஷன் என சகல கோணங்களிலிருந்தும் நமக்கு எழும் சந்தேகங்களுக்கு இப்புத்தகம் விடையளிக்கிறது.
பிக்சல்
டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல் | ஆசிரியர் : சி.ஜெ.ராஜ்குமார்
| வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் | விலை : 230/- தொலைபேசி: 04466752411