நூல் நோக்கு: துயரங்களின் கதைகள்

நூல் நோக்கு: துயரங்களின் கதைகள்
Updated on
1 min read

போர்கள், கலவரங்கள் என எது நடந்தாலும் அதில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் ஒன்றும் அறியாத சாதாரணப் பொதுமக்களே என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை எனலாம். இந்தக் கருத்தைத் தன்னுடைய முதல் புத்தகமான ‘தாழிடப்பட்ட கதவுக’ளில் வலியுறுத்தியுள்ளார் எழுத்தாளர் அ.கரீம். கோவை மாவட்டத்தில் 1998-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்புக் கலவரம் மற்றும் அதற்கு முன்னதாக நடந்த கோட்டைமேடு துப்பாக்கிச் சூடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வாழ்க்கை எவ்வாறு மதத்தின் பெயரால் தலைகீழாக மாறிபோனது என்பதை இந்தத் தொகுப்பின் 10 கதைகளும் சொல்கின்றன.

கலவரங்கள் மதத்தின் பெயரால் நடந்தாலும் அதில் பாதிக்கப்படுபவர்கள் இரண்டு தரப்பிலும் உள்ள அப்பாவி மக்கள்தான் என்பதை அழுத்தமாக இந்தக் கதைகள் சொல்கின்றன. கோவை கலவரம் நடந்து பல ஆண்டுகள் ஆகியும் தற்போதும் அதனுடைய தாக்கம் அப்பகுதி மக்களின் மனதில் அழியாமல் உள்ளதற்கான காரணம் என்ன என்பதை வாசகர்களுக்கு விளக்க இந்த நூல் உதவும்.

-ரேணுகா

தாழிடப்பட்ட கதவு
அ. கரீம் | விலை: ரூ.140
வெளியீடு: பாரதி புத்தகாலயம், சென்னை-18.
044-2433 2424.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in