

வெளிவந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விற்பனையிலும் பதிப்புகளிலும் பிரதான இடத்தை கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ வகித்துக்கொண்டிருப்பது சாதாரண விஷயமில்லை.
இந்த அவசர யுகத்திலும் இவ்வளவு பெரிய நூலைப் படிப்பதற்குப் புதுப்புது வாசகர்கள் உருவாவது வியப்பே! எத்தனையோ பதிப்புகள் வந்துவிட்டன. இருந்தாலும் 5 பாகங்களையும் உள்ளடக்கி மலிவு விலையில் நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்தப் பதிப்பு, இந்தப் புத்தகக் காட்சியில் தவற விடக்கூடாத ஒன்று!
பொன்னியின் செல்வன்
கல்கி
ரூ. 325, நக்கீரன் வெளியீடு.