

தமிழ்ச் சிறுபத்திரிகை உலகில் ஓவியர் களும் எழுத்தாளர் களும் சேர்ந்து பணி செய்யும் அபூர்வமான பிணைப்பு 1970-களின் இறுதியில் ஏற்பட்டது.
‘கசடதபற’ இதழ் தொடங்கி வைத்த இந்தக் கூட்டணி இன்றுவரை தொடர்வது. கல்வெட்டு எழுத்துக்களின் தாக்கத்தில் ஓவியர் ஆதி மூலம் உருவாக்கிய எழுத் தோவியங்களும், எழுத்தாளர் களின் ஓவியங்களும் என்றும் மனதில் அழியாதவை. ஆதிமூலம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் புத்தகங்களுக் காகவும் சிற்றிதழ்களுக்காகவும் வரைந்த 13 எழுத்தாளர்களின் உயிரோட்டமுள்ள முகங்கள் ஆதிமூலம் அறக்கட்டளை சார்பாக அழகிய நாள்காட்டியாக இந்த வருடம் வெளியாகியுள்ளது. உ.வே.சா., லா.ச.ரா. தொடங்கி ஆத்மாநாம் வரை இந்த நாள்காட்டியில் இடம்பெற்றுள்ளனர். முக்கியமான எழுத்தாளர்களின் பிறந்த நாட்களும் இதில் உள்ளன.
கே.எம். ஆதிமூலம் ஃபவுண்டேஷன் வெளியிட்டிருக்கும் இந்த நாள்காட்டியின் விலை ரூ.500.