

பழங்கால இந்திய வரலாற்றுத் துறையின் முக்கியமான ஆய்வறிஞர்களில் ஒருவரான டி.என்.ஜா, இந்து மதம் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் கலாச்சாரரீதியில் தன்னை எவ்வாறு வளர்த்துக்கொண்டுள்ளது என்பதைப் பற்றி எழுதிய கட்டுரை இது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகே பெரும்பான்மையினர் இந்துக்களாக வகைப்படுத்தப்பட்டனர். அவர்களை சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் கருத்தியல் ரீதியாக ஒன்றிணைத்தன.
குறிப்பாக, தயானந்த சரஸ்வதி இந்து மதத்துக்கும் வேதங்களுக்கும் வலுவான இணைப்பை ஏற்படுத்தினார். தயானந்தரின் பசுப் பாதுகாப்பு நடவடிக்கைகளே பல கட்டப் பரிணாமங்களைத் தாண்டி, இன்றைக்கு அரசியல் வடிவம் எடுத்துள்ளது என்பதைப் பற்றி விரிவாகப் பேசும் கட்டுரை இது. கூடவே ஃப்ரண்ட்லைன் இதழில் வெளிவந்த டி.என்.ஜா, இர்பான் ஹபீப் ஆகியோரின் நேர்காணல்களும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன. வரலாற்றறிஞர் டி.என்.ஜா அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பற்றி ஏன் பேசவில்லை என்று பதிப்பகத்தார் முன்னுரையில் எழுப்பியிருக்கும் கேள்வி மட்டும்தான் உறுத்தலாய்ப்படுகிறது.
-புவி