

எஸ்.சங்கரநாராயணன் எழுதிய ‘நன்றி ஓ ஹென்றி’ எனும் சிறுகதை நூலை சமீபத்தில் வாசித்தேன். நேரடியான தொடக்கமும் செறிவான எழுத்து நடையும் கொண்ட கதைகளின் தொகுப்பு. நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களிடம், நாம் பார்க்கத் தவறிய கோணங்களையும் சுட்டிக்காட்டி நம்மை யோசிக்க வைக்கிறார் கதாசிரியர். கையில் நூலை எடுத்துவிட்டால் சரசரவென வாசிக்க வைக்கும் ரசனைமிக்க கதைகள் கொண்ட தொகுப்பிது.
ஒரு வீட்டின் சிக்கல், இருவர் நெருக்கம் அவர்களுக்குள் முடிந்துவிட்டால் அது வாழ்க்கை. அதையே மற்றவர் தலையீட்டுக்கு அனுமதிக்கும்போது பொது அமைதிக்கு ஊறு செய்வதாக மாறிப்போகிறது. அப்படிச் சிதறிப்போன பிரியத்தின் எச்சங்கள் ஒரு கட்டத்தில் பொருளற்றதாகத் தேயும்போது பிறக்கும் வேதனையை ஒரு நாவலாக எழுதிவருகிறேன். இந்த நாவலுக்கு ‘ஒரு துண்டு வானவில்’ என்று பெயர் சூட்டியிருக்கிறேன்.