மழையுடன் ஒரு பந்தம்!

மழையுடன் ஒரு பந்தம்!
Updated on
1 min read

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை - என்று மழையின் கருணையைப் பாடிச் சென்றான் தமிழ் மறை தந்த வள்ளுவன். மழையைப் பாடாத கவிஞனே இல்லை. கவிஞர்களுக்கும் மழைக்குமான உதற முடியாத இந்த பந்தத்தை ச. மணியின் கவிதைகள் நமக்குப் பரிமாறுகின்றன.

மழையையும் அது தந்துவிட்டுப்போன அனுபவங் களையும் மீட்டெடுக்கும் கவிதைகளால் நிறைந்த இத்தொகுப்பில், நனைந்தும் நனையாத நினைவுகளால் உறைந்து நிற்கும் காட்சிகள் கம்பீரமான எளிமையுடன் சட சடக்கின்றன.

இத்தொகுப்புக்கு அறிவுமதி அளித்திருக்கும் அணிந்துரை, நள்ளிரவில் ரகசியமாய் வந்துவிட்டுப்போன மழைபோல் இருக்க, புத்தகத்தின் அட்டையில் இடம்பெற்றிருக்கும் லியோநாட்ரின் மழை ஓவியம் முப்பரிமாண அமைப்பில் அச்சிடப்பட்டிருப்பது பளிச்சென்று ஈர்க்கிறது.

வெயிலில் நனைந்த மழை
ச. மணி
கிருஷ்ணாநகர், நடுப்பட்டி கிராமம்,
பாப்பம்பட்டி, கோயமுத்தூர் - 641 061
தொடர்புக்கு 9942050065/ 984246598 விலை: ரூபாய் 100

- சொல்லாளன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in