பிறமொழி நூலறிமுகம்: காஸி இன வரலாறு

பிறமொழி நூலறிமுகம்: காஸி இன வரலாறு
Updated on
1 min read

இன்றைய மேகாலயா மாநிலத்தில் பெரும்பான்மை இனமான காஸி இனப் பிரிவினரின் வரலாறு, காஸி மொழி வரலாறு ஆகியவற்றைப் பற்றி விரிவாக பேசும் நூல் இது.

காஸி இனத்தின் பழமையான சடங்குகள், இனக்குழுக்களின் தோற்றம், அவர்களின் புராதன வரலாறு, விளையாட்டுகள், உணவு, மது வகைகள், மூத்தோர் வழிபாடு, நடுகல் வழிபாடு, காஸி இனத்தவரின் தனிச்சிறப்பான இரும்புவார்ப்பு போன்ற பல விஷயங்களும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.

காளி இனத்தவரிடையே உருவான ஜனநாயக மரபின் மூலவரான யு தொராட் சிங் பற்றியும் தனியாக விவரிக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட அசாமிலிருந்து தனி மாநிலமாக மேகாலயா பிரிந்த வரலாறும் இதில் கூறப்பட்டுள்ளது. காஸி மொழியில் உயர் கல்வி கற்பிக்கப்படுவது குறித்த பிரிவும் தனித்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in