

எழுத்தாளர் சுஜாதா பெயரில் உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து இலக்கியத் துறையில் சிறப்பாகச் செயல் பட்டுவருபவர்களுக்கு ஆண்டு தோறும் விருதுகளை வழங்கிவருகின்றன. இந்த ஆண்டுக்கான சுஜாதா விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
சுஜாதா சிற்றிதழ் விருது ‘காக்கைச் சிறகினிலே’ சிற்றிதழை நடத்திவரும் வி.முத்தையாவுக்கு அறிவிக்கப்பட்டிருக் கிறது. உரைநடைக்கான சுஜாதா விருதை நற்றிணைப் பதிப்பகம் வெளியிட்ட ‘கதை வெளி மனிதர்கள்’ நூலை எழுதிய அ.ராமசாமி பெறுகிறார். சுஜாதா சிறுகதை விருது இருவருக்கு அளிக்கப்படுகிறது. ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதி எதிர் வெளியீடு வெளியிட்ட ‘வருவதற்கு முன்பிருந்த வெயில்’ தொகுப்புக்கும், பாரதி புத்தகாலயம் வெளியீட்டில் அ.கரீம் எழுதிய ‘தாழிடப்பட்ட கதவுகள்’ சிறுகதைத் தொகுப்புக்கும் வழங்கப்படுகிறது.
சுஜாதா கவிதை விருது மூவருக்கு வழங்கப்பட உள்ளது. கவிஞர் நரனின் ‘லாகிரி’ தொகுப்பு, கவிஞர் ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் ‘சம்மனசுக்காடு’, கவிஞர் வெயிலின் ‘கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்’ தொகுப்பு ஆகியவை இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன. சோ.தர்மனின் ‘சூல்’, கரன் கார்க்கியின் ‘ஒற்றைப்பல்’ ஆகிய இரு நாவல்கள் சுஜாதா நாவல் விருதுக் காகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. சி.சரவண கார்த்திகேயனின் www.writercsk.com, ஷான் கருப்பசாமியின் http://www. kanavudesam.com ஆகிய தளங்களுக்கு சுஜாதாவின் இணைய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விருதுக்குரியவர்களுக்கு மே 3 அன்று நடைபெறும் சுஜாதா பிறந்தநாள் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.