Published : 04 Mar 2017 10:40 AM
Last Updated : 04 Mar 2017 10:40 AM

நூல் நோக்கு: சிங்கப்பூர் சிற்பியின் கதை!

சிங்கப்பூரை உலக வரைபடத்தின் ஒளிரும் புள்ளியாகப் பதிக்கச் செய்தவர்; ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக இருந்தவர்; தளராத முயற்சியில் போராடி வென்றவர் என்று பல சிறப்புகளைக் கொண்டவர் லீ குவான் யூ. மேற்கத்தியக் கலாசாரத்தைப் பின்பற்றிய தனது தந்தைவழித் தாத்தாவின் பாதிப்பில் நுனிநாக்கு ஆங்கிலம், நேரம் தவறாமை, நேர்த்தியான உடை என்று அனைவரையும் வசீகரித்த லீ, அயராத உழைப்பு, சமூக அக்கறை, சமரசமற்ற கொள்கைப் பிடிப்பு மூலம் தன்னிகரற்ற தலைவராக உயர்ந்தார்.

அவரது இளம் பருவம், கல்வி, காதல், அரசியல் பிரவேசம், அரசு நிர்வாகத்தில் அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள் என்று பல்வேறு விஷயங்கள் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. மலேசியா சிங்கப்பூர் இணைப்பு, பின்னர் பல்வேறு சூழல்களின் அடிப்படையில் அந்த உறவில் ஏற்பட்ட முறிவு ஆகியவை சிங்கப்பூரின் எதிர்காலத்தையே தீர்மானித்தன. லீ குவான் யூவின் வரலாற்றைப் படிப்பது என்பது சிங்கப்பூரின் வரலாற்றையே படிப்பதற்குச் சமம் என்பதால் இப்புத்தகம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

- சந்துரு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x