தொடுகறி: 200-வது வயதிலும் வாழும் மார்க்ஸ்

தொடுகறி: 200-வது வயதிலும் வாழும் மார்க்ஸ்
Updated on
1 min read

காரல் மார்க்ஸின் 200வது பிறந்த தினத்தை முன்னிட்டு மார்க்ஸ், எங்கெல்ஸின் தேர்ந்தெடுக்கப் பட்ட நூல்களின் 12 தொகுதிகளை பாரதி புத்தகாலயம் வெளி யிடவுள்ளது. இதற்கான முன் வெளியீட்டுத் திட்டத்தை மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் இந்நிகழ் வில் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ஆர். சம்பகலஷ்மி, பொருளாதார அறிஞர் பேரா. வெ.பா. ஆத்ரேயா, ஆய்வாளர் வ. கீதா ஆகியோர் கலந்துகொண்டனர். மார்க்ஸின் எழுத்துகள் மறுபதிப்பாவது காலத்தின் அவசியத் தேவை என்பதை உணர்த்துவதாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

ரொம்பப் பொருத்தமான பையன்

இந்திய-ஆங்கில எழுத்தாளர் விக்ரம் சேத்தின் ‘எ சூட்டபிள் பாய்’ மிகவும் பிரபலமான நாவல். கிட்டத்தட்ட 1,400 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை எட்டு பாகங்கள் கொண்ட தொடர் நாடகமாக எடுக்க விருக்கிறது பிபிசி. இந்த நாவலை முழுக்க வெள்ளை இனத்தவர் அல்லாதவர்களைக் கொண்டு படமாக்கப் போகிறார்கள். பிபிசியில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை.

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன் அழைக்கிறார்…

கீழத்தஞ்சையில் அடித்தட்டு மக்களைத் திரட்டிப் போராடியதில் தோழர் ஏ.ஜி.கே. என்றழைக்கப்படும் ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனுக்குப் பெரும் பங்கு உண்டு. அவரது முதலாமாண்டு நினைவு நாள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரவிருக்கிறது. அதையொட்டி ஏ.ஜி.கேவின் வாழ்வையும் பணிகளையும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யும் கட்டுரைத் தொகுப்பு வெளிவர இருக்கிறது. தியாகு, பசு. கவுதமன், கொளத்தூர் மணி, வ. கீதா, சோலை சுந்தரபெருமாள், தய். கந்தசாமி, ப்ரேமா ரேவதி, மு.சிவகுருநாதன் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் ஏ.ஜி.கேவைப் பற்றி எழுதிய கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. ஏ.ஜி.கேவைப் பற்றிய கட்டுரைகள் பங்களிக்க விரும்புவோரும் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புகொள்ள: மு. சிவகுருநாதன், கைபேசி எண்: 9842802010

சுஜாதாவை விடாத சர்ச்சை

எழுத்தாளர் சுஜாதா இறந்து ஒன்பது ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அவரைச் சூழும் சர்ச்சைகள் நின்றபாடில்லை. சுஜாதா விருதுகள் அறிவிக்கப்பட்டபோது ‘சுஜாதா ஒரு பிராமணர்’, ‘சிற்றிதழ் உலகை வசைபாடியவர்’ என்பது போன்ற காரணங்களை முன்னிட்டு விமர்சனங்கள் எழுந்தன. விமர்சனங்களுக்கு எதிர் விமர்சனங்கள் எழுந்தன. எல்லாம் சரிதான், ஒருவரையோ ஒரு விருதையோ ஏற்பதும் மறுப்பதும் அவரவர் உரிமை. ஆனால், அது சார்ந்த உரையாடல்கள் அனைத்துத் தரப்பிலும் கண்ணியமாக நடக்க வேண்டுமல்லவா? அறிவுலகைச் சேர்ந்தவர்கள் கண்ணியமான உரையாடல்களுக்குப் பிறருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா என்ற முணுமுணுப்பு எழுந்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in