

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள வலுவான தீவிரவாதக் குழுக்களில் ஒன்றாகக் கருதப்படும் உல்ஃபாவின் (அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி) தோற்றம், அது வலுப்படுவதற்கான காரணிகளை இந்நூல் விரிவாக அலசுகிறது. புதிதாக உருவான இந்திய நாட்டுக்கும் அசாம் பகுதிக்கும் இடையிலான தத்துவார்த்த, அடையாளங்கள் குறித்த முரண்பாடுகள் தீர்வு காணப்படாமல் நீடித்துவந்ததன் அறிகுறியாகவே உல்ஃபா இருக்கிறது. அசாமின் பழங்குடி, இதர இனக்குழுக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிப்பதாகவும் அது இருக்குகிறது.
அது மட்டுமல்லாமல், தொடர்ந்து வரும் சட்டவிரோதக் குடியேற்றங்கள் அசாமின் பன்முகத் தன்மைக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களையும் இந்நூல் முன்வைக்கிறது. சட்டவிரோத குடியேற்றங்களுக்கு நீடித்ததொரு தீர்வுக்கான கட்டமைப்பையும் இது முன்வைக்கிறது. அசாம் மாநில மக்களின் மனப்போக்கை, தீர்வுக்கான அவர்களின் ஏக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் இந்நூல் அமைகிறது.
- வீ.பா. கணேசன்