

ஈழம் என்பது ஈழப் போராட்டம் மட்டுமல்ல; அதற்குப் பின்னே மகத்தான வரலாறு, பண்பாடு எல்லாமும் உண்டு. அந்தப் பண்பாட்டில் முளைத்த காதல் பாடல்கள்தான் இவை. இவற்றில் பெரும்பாலானவை தமிழ் பேசும் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள் என்பது தனிச் சிறப்பு. ஈழத் தமிழர் வாழ்விலிருந்து முஸ்லிம்களின் வேர்கள் பலவந்தமாக அறுக்கப்படாத, எல்லாரும் சக வாழ்வு வாழ்ந்த ஒரு காலத்துக்குரிய பாடல்கள் இவை. ஒருவிதத்தில் சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாகவே இந்தப் பாடல்களைச் சொல்லலாம். தமிழுக்கு இப்படி ஒரு பரிமாணமும், இப்படி ஒரு வளமும் இருப்பதை நூலின் தொகுப்பாசிரியர் அனார் உலகறியச் செய்திருக்கிறார். பாடல்களுக்குப் பொருத்தமான புகைப்படங்களும் இந்தப் புத்தகத்தில் உண்டு. இலங்கையின் நாட்டார் இலக்கியத்துக்கு மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியத்துக்கும் மகத்தான பங்களிப்பு இந்நூல்!
கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்கள்
தொகுப்பு: அனார்
க்ரியா பதிப்பகம்
ரூ.150