Last Updated : 05 Apr, 2014 12:00 PM

 

Published : 05 Apr 2014 12:00 PM
Last Updated : 05 Apr 2014 12:00 PM

கலாச்சாரத்தின் வடிவமாக உடல் மாறிவிடுகிறது: எம்.வி. நாராயணன் நேர்காணல்

ஜனவரி 27 முதல் பிப்ரவரி 3-ம் தேதிவரை, கேரளத்தில் சர்வதேச நாடக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு இந்த விழாவை ஒருங்கிணைத்த ஆங்கிலப் பேராசிரியர் எம்.வி.நாராயணனிடம் தற்கால நாடகத்தின் போக்குகள் குறித்து ப்ரண்ட்லைன் இதழுக்காக (ஏப்ரல் 14) எடுக்கப்பட்ட நேர் காணலின் சுருக்கம் இது.

நாடகம் குறித்த பேச்சுகளில் தற்போது உடல் என்பது மையப் பொருளாக மாறிவிட்டதா?

இலக்கியப் பிரதியிலிருந்து நாடகத்தின் நிகழ்த்துதல் சார்ந்து கவனம் திரும்பியிருக்கிறது. மரபிலிருந்து, நிகழ்காலத்தில் நடப்பவை மற்றும் சுயத்தை நோக்கிய நகர்வு இது. நாடகம் குறித்த உரையாடல்களில் முக்கியப் பிரச்சினைகளாக உடலும், வெளியும் ஆகியுள்ளன. நாடகத்தின் உபகரணங்களை நோக்கிக் கவனம் குவிந்துள்ளது. வார்த்தை களுக்கு முக்கியத்துவம் குறைந்துள்ளது. உடல் வாயிலாகத் தான் உலகை அறிய முடியுமெனில், கலாச்சாரத்தின் வடிவமாக உடல் மாறிவிடுகிறது.

சுயமே நாடகத்தின் மையமாக மாறும்போது, நாடகம் சமூகத் திலிருந்து விலகிவிடுகிறதா?

ஒரு உடல் தனிப்பட்ட உடலாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சந்திரலேகா வின் படைப்புகள் உடல்மீது பல விதங்களில் கவனம் குவித்தன. படைப்புகளில் உடல்கள் பரஸ்பரம் உரையாடு கின்றன. உடல் என்பது எது? அதை வைத்து என்ன செய்ய முடியும்? போன்ற கேள்விகள் எழுகின்றன. இந்த எல்லாக் கேள்விகளிலும் பிற உடல்களும் சம்பந்தப் பட்டிருக்கின்றன. ஹெரால்ட் பின்ட்டர் கதவு பற்றிப் பேசுகிறார்.

கதவென்ற இருப்பே பல அனுமானங்களைத் தனக்குள் வைத்திருக்கிறது ஒரு நபரின் வருகை அறையின் செயல்பாட்டையே மாற்றிவிடுகிறது. யாரும் வராத போது, எவரோ வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒரு உடலின் இருப்பில் இன்னொரு உடலுக்கான எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே உடல் என்பது உயரியல் ரீதியானது அல்ல. கலாச்சார ரீதியானது.

நாடகங்களில் அரசியல் உள்ளடக்கம் முன்பை விட அதிகமாகியுள்ளதா? மரபை முற்றி லும் புறக்கணித்து விட முடியுமா?

பார்வையாளர்களாக, நாடகப் படைப்பாளிகளாக நாம் கூடுதலான விழிப்புணர்வுடன் உள்ளோம். நாம் வாழும் உலகத்தில் ஒவ்வொரு செயலுமே அர்த்த கனம் கூடியது. அதைப் புறக்கணிக்க முடியாது. ஆணோ, பெண்ணோ ஒவ்வொருவரும் குறிப்பிட்ட வழியில்தான் செயல்படவும் கேள்வி கேட்கவும் வேண்டியுள்ளது. இந்த அறிவு அவர்களது நடைமுறையிலும் படைப்பிலும் பிரதிபலிக்கிறது.

இத்தனை ஆண்டுகள் வரலாற்றில் அரசியல் அல்லாமல் எதுவும் நடந்திருக்கிறதா என்ன? நமது வாழ்க்கை கதைகளால் உருவாக்கப்பட்டது; தொடர்ந்தும் கதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதை நம்மால் தவிர்க்கவும் முடியாது. அந்தக் கதையின் பல்வேறு அடுக்குகள் குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது. ஒன்றை உருவாக்குவதற்காக இன்னொன்றை அழிக்கிறோம்.

தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x