

தஞ்சை மண்ணைச் சேர்ந்த முக்கியமான இளம் படைப்பாளிகளில் ஒருவர் வியாகுலன். சிறுபத்திரிகை மரபின் தொடர்ச்சியாகச் செயல்பட்டுபவருபவர். அவரது இந்தக் கவிதைத் தொகுப்பு தஞ்சை மண்ணின் வாசம், அப்பாவைப் பற்றிய கவிதைகள், இயற்கையுடனான உறவு போன்றவற்றின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. பழஞ்சொற்களும் எளிய சொற்களுமாகக் கலந்து ஒரு அலாதியான வாசிப்பனுபவத்தைத் தரும் கவிதைகள் இவை.
மழை நாளின் கானக இசை
பறவைகளலைவு கொண்ட
மரக்கிளைகள்
பிரதான
விலங்கின்
மூச்சொலி
வெளியின் முகங்களடர்ந்த
நிறமின்மை
நதியின்
புதைசுழல்
மின்னலின்
துரிதம்
பார்வைகளற்ற வார்த்தைகளின் கானகம்
ஆடியின் திசைகளில் கானங்களின் இருதயம்
வேட்டையில் தப்பிய ஒற்றை முயலின்
பளிங்குக் கண்களில் கானக மழையின் இசைநாள்