

விழாவில், ‘ஓர் இருள் சகாப்தம் - இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு’ என்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், பேராசிரியர் கௌரி விஸ்வதநான் இருவரும் கலந்துரையாடினர். அமர்வில் சசி தரூர் பேசியது:
“கனட பிரதமர் ஜஸ்டின் ட்ருடியு ‘கோமோகட்டா மாரு’ நிகழ்வுக்காக இந்தியர்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார். அதே மாதிரி, பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அப்படி மன்னிப்புக் கேட்பதும் ‘ஜாலியன்வாலாபாக்’ படுகொலை நடந்த இடத்தில் மன்னிப்புக் கேட்பதுதான் சரியாக இருக்கும். இந்தத் தார்மீக பிராயச்சித்தம் பணமாகத் திருப்பிச் செலுத்தும் பிராயச்சித்தத்தைவிடச் சரியானதாக இருக்கும். பிரிட்டிஷ் அரசாங்கம் உண்மையான காலனி ஆதிக்க வரலாற்றை அவர்களுடைய பள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்” என்றார் சசி தரூர்.