

உழைப்பின் கடுமைக்குள் ளிருந்துதான் மக்கள் இசை யையும் கலையையும் பிரசவித் தார்கள் என்றும் ஒரு வாதம் இருக்கிறது. கடலின் ஒலியில் கலந்து வரும் ஏலேலோ ஐலசா முதல் நெற்பயிரின் சரசரப்புக்கு இடையே ஒலிக்கும் தெம்மாங்கு வரை எல்லாம் வியர்வையின் மணம் கலந்தவையே. அத்தகைய இசை வகைகளில் தனி வகை யானது சென்னையின் கானா.
கானாவின் ஊற்றை நாம் எங்கே தேடுவது. அந்தக் கலை நதியை சென்னை நகரில் பல மனிதர்கள் தங்களுக்குள் உள்வாங்கி அதில் கரைந்துள்ளார்கள். கானா தொடர்ந்து பாய்ந்து செல்வதற்கான பாசனக் கால்வாய்களாகத் தங்களை மாற்றிக்கொண்டு வரலாற்றில் கரைந்தும் கலந்தும் வாழ்கின்றனர். அத்தகையவர்களின் வரலாற்றுக் கதைகளின் பதிவு இது. கானா கலைஞர்களுக்கான சிறப்பான அஞ்சலி இது!
- நீதி
உருமாறிய இசை- கானா
வை. இராமகிருஷ்ணன்
விலை: ரூ.75
வெளியீடு: அடித்தள மக்களின் தகவலாய்வு பண்பாட்டு மேம்பாட்டு மையம், சென்னை-54.
தொடர்புக்கு: 94446 21686.