Published : 20 Sep 2014 03:12 PM
Last Updated : 20 Sep 2014 03:12 PM

புத்தகங்களோடு பயணிப்பவன் நான்! - இயக்குநர் வெற்றிமாறன்

வெற்றிமாறன், இரண்டாவது படத்திலேயே தேசிய விருதை வென்றவர். தமிழ்த் திரையுலகில் வாசிப்பு பழக்கம் கொண்ட கலைஞர்களில் இவருக்கு முக்கிய இடம் உண்டு.

திரைத்துறையில் மாற்றங்கள் நிகழ்த்தும் துடிப்பான தலைமுறையின் வெற்றிமுகமான இவர், ‘அதிர்வு’ என்ற பதிப்பகத்தையும் நடத்திவருகிறார். ‘அதிர்வு’ பதிப்பகத்தின் முதல் புத்தகம், சி. மோகனின் மொழிபெயர்ப்பில் வெளியான ‘ஓநாய் குலச்சின்னம்’. ஜியாங் ரோங் என்ற சீன எழுத்தாளர் எழுதிய Wolf Totem நாவலின் மொழிபெயர்ப்பு அது. புத்தகம், வாசிப்பு குறித்த அவரது எண்ணங்கள்:

• முன்பெல்லாம் நிறைய வாசிப்பேன். நேர நெருக்கடி காரணமாக வாசிப்பு கொஞ்சம் குறைந்திருக்கிறது. எனினும், நேரம் கிடைக்கும்போது வாசித்துவிடு கிறேன். நண்பர்கள் பரிந்துரைக்கும் புத்தகங் களையும் வாசித்துவிடுகிறேன். ஒரு புத்தகத்தைக் குறைந்தபட்சம் 3 மாதங்களில் முடித்துவிடுவேன்.

• பயணத்தின்போது எனது பையில் அதிகம் இடம் பெறுவது புத்தகங்கள்தான். இணக்கமான சூழலில் புத்தகங்களை வாசித்துவிடுவேன். கழிப்பறையில் கூட புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டு.

• ஜியாங் ரோங் எழுதிய Wolf Totem, அலெக்ஸ் ஹேலி எழுதிய Roots: The Saga of an American Family, மரியோ வர்கஸ் யோஸா எழுதிய The Feast of the Goat போன்ற புத்தகங்கள் என் வாழ்க்கையை வடிவமைத்தவை.

• புத்தகங்கள்தான் என் வாழ்வில் பெரும் பாதிப்பைத் தந்தன. என் வளர்ச்சியின் ஆதாரமாக இருந்தது வாசிப்புதான். லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கத் தொடங்கிய காலத்தில் வாசிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்தது. எனக்கு அமைந்த நண்பர்களும் பேராசிரியர்களும் வாசிப்பு விஷயத்தில் என் ஈடுபாடு அதிகரிக்கக் காரணமாக இருந்தனர்.

• எழுதுவதில் ஆர்வம் இருந்தது. எனினும், ஏனோ அது கைகூடாததால், திரைக்கதை பக்கம் வந்து விட்டேன். எழுதுவது என்பது தனிக்கலை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x